Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பெருவில் நரபலி கொடுக்கப்பட்ட குழந்தைகள்: எச்சங்கள் கண்டுபிடிப்பு

In உலகம்
Updated: 03:51 GMT, Jun 15, 2018 | Published: 03:51 GMT, Jun 15, 2018 |
0 Comments
1084
This post was written by : Risha

வடக்கு பெருவில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என நம்பப்படும் நரபலி கொடுக்கும் தளமொன்றிலிருந்து நூறிற்கும் அதிகமான குழந்தைகளின் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

வடக்கு பெருவின் ட்ருஜில்லா தளத்தில் பல மாதங்களாக அகழ்வாராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், நேற்று (வியாழக்கிழமை) மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மனித எச்சங்கள் குழந்தைகளது என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இந்த கண்டுபிடிப்பின் மூலம் உலகிலேயே அதிகமான குழந்தைகள் நரபலி கொடுக்கப்பட்ட பாரிய தளமாக இது அடையாளம் காணப்பட்டுள்ளது.

பெருவின் பழங்கால கலாசாரங்களில் நரபலி கொடுக்கும் செயற்பாட்டை பலரும் கடைப்பிடித்து வந்துள்ளனர். இந்த செயற்பாடு குறித்த பின்னணியின் சரியான நோக்கம் புலப்படாத போதிலும், சில கடினமான தருணங்களில் கடவுளை சாந்தப்படுத்தும் வகையில் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)