Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிக்க கோரிய மனு நிராகரிப்பு!

In இந்தியா
Updated: 03:32 GMT, Jun 15, 2018 | Published: 03:32 GMT, Jun 15, 2018 |
0 Comments
1091
This post was written by : Kemasiya

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 27 வருடங்களாக சிறைத்த தண்டனையை அனுபவித்து வரும் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க கோரி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவர் நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக அரசு தாக்கல் செய்த மனுவே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளதாக, உள்துறை அமைச்சகத்தின் அதிகாரியொருவர் நேற்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளார்.

அதாவது உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனைப்படியே ஜனாதிபதி முடிவெடுக்க முடியும்.  எனவே உள்துறை அமைச்சகத்தின் கோரிக்கையின் பேரிலே ஜனாதிபதி மனுவை நிராகரித்திருக்க கூடும் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை முன்னாள் பிரதமர் கொலை குற்றவாளிகள் எந்த சூழலிலும் சுதந்திரமாக நடமாட முடியாதென, உள்துறை அமைச்சக மூத்த அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்பட 7 பேர் கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை கைதிகளாக உள்ளனர். கருணை அடிப்படையில் இவர்களை விடுவிக்க வேண்டுமென தமிழக அரசு, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடந்த  ஆண்டுகளில் இரண்டு முறை கடிதம் எழுதியிருந்தது. ஆனால், இரண்டு கடிதங்களும் நிராகரிக்கப்பட்டன.

இந்நிலையில், 7 பேரை விடுவிக்க வேண்டுமென்று ஜனாதிபதிக்கு தமிழக அரசு அனுப்பியுள்ள மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)