Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

லூயிஷம் இடைத்தேர்தல்: தொழிற்கட்சி அமோக வெற்றி

In
Updated: 08:17 GMT, Jun 15, 2018 | Published: 03:29 GMT, Jun 15, 2018 |
0 Comments
1095
This post was written by : Varshini

லண்டன் – லூயிஷம் கிழக்கு இடைத்தேர்தலில் தொழிற்கட்சியைச் சேர்ந்த கறுப்பின பெண்மணியான ஜெனட் டெபி வெற்றபெற்றுள்ளார்.

லூயிஷம் நகரின் முன்னாள் மேயரான இவர், 50.2 வீத வாக்குகளால் வெற்றிபெற்றுள்ளார்.

இன்று காலை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதன்படி அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட லிபரல் ஜனநாயகக் கட்சி மற்றும் கொன்சர்வேட்டிவ் கட்சியை பின்தள்ளியுள்ளார்.

லூயிஷம் தொகுதியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான ஹெய்டி அலெக்ஷாண்டர் கடந்த மே மாதம் தமது பதவியை ராஜினாமா செய்திருந்தார். அதனையடுத்து அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டதோடு, தொழிற்கட்சி சார்பில் சிறுபான்மை மற்றும் கருப்பினத்தைச் சேர்ந்த டெபி நிறுத்தப்பட்டார்.

இதில் 11,033 வாக்குகளை டெபி பெற்றதோடு, அவரை எதிர்த்து போட்டியிட்ட லிபரல் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த லூஷி சாலெக் 5,404 வாக்குகளைப் பெற்றார். அத்தோடு,  கொன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் போட்டியிட்ட ரொஸ் ஆர்செர் 3,161 வாக்குகளை மாத்திரமே பெற்றார்.

இவ்வெற்றி குறித்து மகிழ்ச்சி வெளியிட்டுள்ள டெபி, தனது தொகுதியின் கல்வி, சுகாதாரம் மற்றும் வீடமைப்பு தொடர்பில் அதிக கரிசனையுடன் செயற்படவுள்ளதாக கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)