Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மன உளைச்சலினால் மாணவன் தூக்கிட்டு தற்கொலை

In இலங்கை
Updated: 05:57 GMT, Jun 15, 2018 | Published: 04:18 GMT, Jun 15, 2018 |
0 Comments
1100
This post was written by : Yuganthini

யாழ்ப்பாணம், வேலணை மத்திய கல்லூரி பாடசாலை விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்று வந்த மாணவன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் மயூரன் மதுபன் (14 வயது) என்ற மாணவனே உயிரிழந்துள்ளார்.

இவர் பாடசாலையிலுள்ள கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

உரும்பிராயை சேர்ந்த குறித்த மாணவன் கிளிநொச்சியில் வசித்து வந்துள்ளார்.  இதன்போது இச்சிறுவனது தாயார் இறந்த நிலையில் தந்தை வேறொரு திருமணத்தை செய்திருந்தார்.

இந்நிலையில் தந்தையும் அவரது இரண்டாம் மனைவியும் சிறுவனை வேலணை மத்திய கல்லூரி விடுதியில் சேர்த்துள்ளனர்.

இதனையடுத்து சிறுவன் குறித்த கல்லூரி விடுதியில் தங்கி கற்றலில் ஈடுபட்டு வந்த போதிலும் இடையில் விடுதியில் இருந்து தப்பித்து உறவினர்களிடம் சென்றதாகவும் பின்னர் அவர்கள் மீண்டும் பாடசாலையில் சிறுவனை விட்டு சென்றதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

இந்நிலையிலேயே குறித்த சிறுவன் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)