Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரித்தானியாவை திகைக்க வைத்த பேரழிவு: ஓராண்டு நினைவிற்காக அமைதி பேரணி

In
Updated: 04:19 GMT, Jun 15, 2018 | Published: 04:19 GMT, Jun 15, 2018 |
0 Comments
1076
This post was written by : Risha

பிரித்தானியாவையே திகைக்க வைத்த லண்டன் கிரென்ஃபெல் டவர் தீ அனர்த்தத்தின் ஓராண்டு நினைவை முன்னிட்டு அமைதி பேரணியொன்று நடத்தப்பட்டுள்ளது.

கிரென்ஃபெல் டவரை அண்மித்த பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற பேரணியில், தீ அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கைக்கோர்த்திருந்தனர்.

கிரென்ஃபெல் டவர் குடியிருப்பு கட்டடத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற தீ அனர்த்தத்தில் உயிரிழந்த 71 பேரை நினைவுகூர்ந்து நடத்தப்பட்ட பேரணியில், பச்சை நிறத் துண்டுகளை அணிந்தவாறும், பச்சை நிற பதாதைகளை ஏந்தியவாறும் மக்கள் அமைதியாக அணிவகுத்து சென்றனர்.

குறித்த பேரணியில் பிரித்தானிய எதிர்க்கட்சியான தொழிற்கட்சி தலைவர் ஜெரமி கோர்பின், லண்டன் மேயர் சாதிக் கான் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர். பேரணியில் சுமார் 5 ஆயிரம் பேர்வை கலந்துக் கொண்டிருந்ததாக பொலிஸார் மதிப்பிட்டுள்ளனர்.

இந்த பாரிய அனர்த்தத்திலிருந்து உயிர் தப்பிய சமூகத்தினரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிறம் என்றவகையிலும், உயிரிழந்த மக்களை நினைவுகூரும் துயரத்தின் அடையாளமாகவும் பச்சை நிறம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கிரென்ஃபெல் டவர் அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு நாடாளுமன்றத்தில் நேற்று 72 செக்கன் மௌன அஞ்சலி செலுத்தப்பட்ட நிலையில், அதில் எலிசபெத் மகாராணி, இளவரசர் ஹரி, சசெக்ஸ் சீமாட்டி மேகன் மார்க்கல், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்துக் கொண்டனர்.

அத்துடன், மேற்கு லண்டனில் புனித ஹெலன் தேவாலயத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து விசேட பிரார்த்தனை நிகழ்வொன்று நடத்தப்பட்டுள்ளது. இதன்போது மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு பின்னர் கூண்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த புறாக்களை விடுவித்து வானில் பறக்கவிட்டுள்ளனர்.

பல்லின சமூகத்தினரை கொண்ட கிரென்ஃபெல் டவர் குடியிருப்பில் கடந்த ஆண்டு ஜுன் மாதம் 24ஆம் திகதி இரவு திடீரென தீப்பரவியதில் 71 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இரண்டாம் உலகப் போருக்கு பின்னராக உள்நாட்டில் ஏற்பட்ட மிகக் கொடூரமான பேரழிவாக இது நோக்கப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)