Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முதல் போட்டியில் கோல் மழை பொழிந்த ரஷ்யா!

In உதைப்பந்தாட்டம்
Updated: 05:54 GMT, Jun 15, 2018 | Published: 05:54 GMT, Jun 15, 2018 |
0 Comments
1192
This post was written by : Varshini

இரசிகர்களின் எதிர்பார்ப்பையும் தாண்டிய ஒரு வெளிப்பாட்டுடன் ரஷ்யாவில் 2018 உலகக்கிண்ண கால்பந்து திருவிழா ஆரம்பமானது. கண்கவர் நிகழ்சிகளுடன் ஆரம்பமான இத்தொடரின் முதல் போட்டியில் ரஷ்யா கோல் மழை பொழிந்தது.

முதல் போட்டியில், தொடரை நடத்தும் ரஷ்யாவும் சவுதி அரேபியாவும் பலப்பரீட்சை நடத்தின. ஆயிரக்கணக்கான இரசிகர்களின் கரகோஷத்திற்கு மத்தியில் அரங்கேறிய இப்போட்டியில், ஆரம்பம் முதலே ரஷ்ய அணி வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.

இதற்கமைய போட்டியின் 12ஆவது நிமிடத்தில் ரஷ்ய அணி கோல் அடித்து, உள்ளூர் இரசிகர்களை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தியது. தொடரின் முதல் கோலை அடித்த பெருமிதத்துடன் கசின்ஸ்கீ துள்ளிக் குதித்து மைதானத்தை வலம் வர, இரசிகர்கள் ரஷ்ய தேசிய கொடியை அசைத்தவாறு அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.

இதையடுத்து, 43வது நிமிடத்தில் டென்னிஸ் செரிஷேவ் இரண்டாவது கோல் அடித்து ரஷ்ய அணியை முன்னிலைப்படுத்தினார். இதனால் ரஷ்யா அணி முதல்பாதி நேர ஆட்டத்தில் 2-0 என முன்னிலை பெற்றது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தில், பதிலடி கொடுக்க வேண்டுமென்ற முனைப்புடன் களமிறங்கிய சவுதி அணி, பந்தினை தன்வசப்படுத்தி கோல் அடிக்க முயற்சித்த போது, அனைத்து முயற்சிகளையும் ரஷ்ய அணியின் வீரர்கள் முறியடித்தனர்.

ஆனாலும், தங்களது ஆக்ரோஷ ஆட்டத்தை கைவிடாத ரஷ்ய அணி, 71வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தியது. இந்த கோலை டிசியூபா அடித்தார்.

மேலதிக நேர பரபரப்பான ஆட்டத்தில் டென்னிஸ் செரிஷேவ் மீண்டும் இரண்டாவது கோலை அடிக்க, கோலோவின் ஐந்தாவது கோலையும் அடித்தார்.

ரஷ்யாவின் தொடர்களால் திகைத்துப் போன சவுதி அணியினர், செய்வதறியாது திக்குமுக்காடினர். இந்த அதிர்ச்சியுடன் சவுதி அரேபியா இறுதிவரை போராடியும் அவர்களால் ஒரு கோலையேனும் பெற்றுக்கொள்ள முடியாமல் போனது. இதனால் ரஷ்ய அணி 5-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் ரஷ்யா அணி 3 புள்ளிகளைப் பெற்றுக்கொண்டது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)