Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரதியமைச்சர் நளின் பண்டார FCIDஇல் முன்னிலை

In இலங்கை
Updated: 06:15 GMT, Jun 15, 2018 | Published: 06:15 GMT, Jun 15, 2018 |
0 Comments
1156
This post was written by : Yuganthini

சட்டம், ஒழுங்கு மற்றும் பொது நிர்வாக முகாமைத்துவ பிரதியமைச்சர் நளின் பண்டார, நிதிக்குகுற்ற தடுப்புப் பிரிவில் இன்று (வெள்ளிக்கிழமை)  முன்னிலையாகியுள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் கப்பல்களை கொள்வனவு செய்தபோது இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதிமோசடி தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் அவர் இன்று காலை நிதிக்குற்ற தடுப்புப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற இந்த மோசடி தொடர்பாக நளின் பண்டார ஏற்கனவே பல தடவைகள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்தார். கடந்த 2014ஆம் ஆண்டு 40 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான இரண்டு கப்பல்களை 70 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மஹிந்த அரசு கொள்வனவு செய்ததாகவும் இதன்போது 30  மில்லியன் அமெரிக்க டொலர்கள் மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் நளின் பண்டார கூறியிருந்தார்.

இந்நிலையில், இந்த மோசடி தொடர்பில் வாக்குமூலம் வழங்கவே நளின் பண்டார நிதிக்குற்ற தடுப்புப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)