Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்க ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கைகோர்ப்பு

In ஐரோப்பா
Updated: 11:12 GMT, Jun 15, 2018 | Published: 06:39 GMT, Jun 15, 2018 |
0 Comments
1065
This post was written by : Risha

அமெரிக்க தயாரிப்புகள் மீது இறக்குமதி வரிச் சுமையை அறிமுகப்படுத்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஏகமனதாக தீர்மானம் மேற்கொண்டுள்ளன.

உருக்கு மற்றும் அலுமினிய இறக்குமதிகள் மீதான அமெரிக்காவின் வரி விதிப்பிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று (வியாழக்கிழமை) இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தீர்மானத்தின்படி, 3.3 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அமெரிக்க தயாரிப்புகளுக்கு வரி விதிக்கப்படவுள்ளது.

அமெரிக்க தயாரிப்புகள் மீதான வரி விதிப்பானது விரைவில் அமுலுக்கு வரும் என ஐரோப்பிய ஆணைய வட்டாரத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கும் வகையிலான வரி விதிப்பானது இம்மாத இறுதிக்குள் அல்லது ஜுலை மாத ஆரம்பத்தில் அமுலுக்குவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடா, ஐரோப்பிய ஒன்றியம், மெக்ஸிகோ உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உருக்கு மற்றும் அலுமினியப் பொருட்கள் மீது அமெரிக்கா அண்மையில் இறக்குமதி வரிகளை விதித்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)