Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜம்மு-காஷ்மீரில் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை!

In இந்தியா
Updated: 06:51 GMT, Jun 15, 2018 | Published: 06:51 GMT, Jun 15, 2018 |
0 Comments
1054
This post was written by : Kemasiya

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் பகுதியில், பத்திரிகை ஆசிரியர் ஒருவர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீநகர் லால்சவுக் பகுதியில் நேற்று (வியாழக்கிழமை), இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காஷ்மீரில் இயங்கிவரும் ரைசிங் பத்திரிகையின் பிரதான ஆசிரியர், ஷீஜாத் புகாரி என்பவரே மேற்படி சுடப்பட்டுள்ளார்.

காரில் பயணித்து கொண்டிருந்த இவரை வழிமறித்த தீவிரவாதிகள், பத்திரிகை ஆசிரியர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.

இதன்போது ஷீஜாத் புகாரியின் பாதுகாவலர்களும், துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகினார்கள்.

சம்பவம் தொடர்பில் அறிந்து குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார், மூவரையும் மீட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

எனினும் சிகிச்சை பயனின்று பத்திரிகை ஆசிரியர் மற்றும் பாதுகாவலர் ஒருவர் நேற்றே உயிரிழந்தனர்.
இந்நிலையில் மற்றைய பாதுகாவலரும் இன்று உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள அதேவேளை, சந்தேகத்தின் பெயரில் மூன்று இளைஞர்களின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த பத்திரிகையாளரின் கொலை தொடர்பில், அம்மாநில முதல்வர் மெகபூபா முப்தி கண்டனம் வெளியிட்டுள்ள அதேவேளை இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் இதற்கு முன்னர் கடந்த ஆண்டு கௌரி லங்கேஷ் என்னும் பத்திரிகையாளர், அவரது வீட்டில் வைத்து தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்டார்.

இக்கொலை தொடர்பான விசாரணைகளில், இதுவரை குற்றவாளிகள் இனங்காணப்படாத நிலையில், மேலுமொரு பத்திரிகையாளர் தீவிரவாதிகளின் துப்பாக்கிக்கு இரையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)