Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிழக்கு மாகாணம் பறிபோனால் கூட்டமைப்பே பொறுப்புக்கூற வேண்டும்: வியாழேந்திரன்

In இலங்கை
Updated: 06:48 GMT, Jun 15, 2018 | Published: 06:48 GMT, Jun 15, 2018 |
0 Comments
1351
This post was written by : Yuganthini

கிழக்கு மாகாண சபையினை தமிழர்கள் அல்லாதவர்கள் கைப்பற்றினால் அதற்கான முழுப்பொறுப்பையும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சித் தலைவர்களே ஏற்றுக்கொள்ளவேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு, மண்முனைப்பற்று கிரான்குளம் விநாயகர் மகா வித்தியாலத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்,

“எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துடன் வடக்கு மாகாணசபையின் பதவிக்காலம் முடிவடைகின்றது. இதனால் வடக்கு மாகாணசபைக்கு அடுத்த முதலமைச்சர் யார் என்று தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் பேசப்படுகின்றது.

ஆனால் கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் கிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டது. எனினும், கிழக்கின் அடுத்த முதலமைச்சர் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை எந்த தீர்மானத்தினையும் எடுக்கவில்லை.

மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பிலுள்ள சிலர் உண்மைகளை பேசுவதே குறைவு. சிலருக்கு பேசுவதற்கு அச்சம். நான் அதைபற்றி சிந்திக்கவில்லை. வடக்கு மாகாணத்தில் யார் எதனைச் செய்தாலும் அங்கு தமிழர்கள்தான் நிலைநிறுத்தப்படுவார்கள்.

ஆனால் கிழக்கு மாகாணத்தின் நிலைமைகள் அவ்வாறில்லை. இங்கு மிகவும் கவனமாகவும் விழிப்பாகவும் செயற்படவேண்டிய நிலையுள்ளது. இல்லையென்றால் கிழக்கு மாகாணத்தினை தமிழர்கள் ஆளுகின்ற அதிகாரத்தினை இழக்கின்ற நிலைமை ஏற்படும்.

இதனால் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கின்ற அங்கத்துவ தலைமைத்துவங்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவமும் உடனடியாக கூடி, கிழக்கு மாகாணத்திற்குரிய அடுத்த முதலமைச்சர் வேட்பாளர், கிழக்கு மாகாணசபை வேட்பாளர்கள் யார் என்பதை உடனடியாக அறிவிக்கவேண்டும்.

ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி, ஐக்கிய தேசிய கட்சி போன்ற தேசிய கட்சிகளும் மட்டக்களப்பு-அம்பாறை பகுதிகளுக்கு சென்று தற்போதே மாகாணசபை தேர்தலுக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றன. இதனை உணர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)