Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஞானசாரரின் தண்டனை மனித உரிமைக்கு கிடைத்த வெற்றி: சர்வதேச மன்னிப்பு சபை

In இலங்கை
Updated: 07:02 GMT, Jun 15, 2018 | Published: 07:02 GMT, Jun 15, 2018 |
0 Comments
1153
This post was written by : Risha

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட தண்டனை, மனித உரிமை ஆர்வலர்களுக்கு கிடைத்த வெற்றி என சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.

காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் ஞானசார தேரருக்கு நேற்று (வியாழக்கிழமை) சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. இந்நிலையிலேயே சர்வதேச மன்னிப்பு சபை இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

மனித உரிமைக்காக போராடும் அனைவரும் போற்றும் வகையிலான முக்கியமான தீர்ப்பொன்று நேற்றைய தினம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்பு சபையின் தெற்காசிய துணை பணிப்பாளர், இதன் மூலம் நீதிக்கு அச்சுறுத்தலாக செயற்படும் மற்றும் நீதியை மௌனிக்க செய்ய விரும்புவோருக்குமான சிறந்த எச்சரிக்கையாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கடந்த மே மாதம் ஞானசாரர் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இந்த சிறைத் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)