Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எனது மகனை கருணை கொலை செய்துவிடுங்கள்: கதறும் அற்புதம்மாள்

In இந்தியா
Updated: 07:12 GMT, Jun 15, 2018 | Published: 07:12 GMT, Jun 15, 2018 |
0 Comments
2095
This post was written by : Kemasiya

தனது மகன் பேரறிவாளனை விடுவிக்காவிட்டால் கருணை கொலை செய்யுங்கள் என, தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.

பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிக்க கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை,ஜனாதிபதிராம் நாத் நிராகரித்துள்ள நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகமொன்றிற்கு வழங்கிய கருத்தில் அற்புதம்மாள் மேற்படி கூறியுள்ளார்.

எனது மகனை சிறையில் அடைத்து வைத்து தினமும் சாகடிப்பதை விட, கருணைக் கொலை செய்து விடுங்கள் எனக் கதறியுள்ளார்.

மேலும்  மகனை விடுவிக்க முடியாதென கூறும் மத்திய அரசிடம், மகனை கருணைக்கொலை செய்துவிடுமாறு கூறி மனுவளிக்க உள்ளதாகவும், அற்புதம்மாள கண்ணீருடன் கூறியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில், குற்றவாளிகள் என்ற சந்தேகத்தின் பேரில் பேரறிவாளன், சாந்தன், நளினி உள்ளிட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் கடந்த 27 ஆண்டுகளாக சிறைத் தண்டனையை அனுபவித்து வரும் நிலையில், இந்திய அரசியலமைப்பின் பிரிவு 161 ஐ பயன்படுத்தி அவர்களை விடுதலை செய்யுமாறு, தமிழக அரச தரப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் இது தொடர்பில் ஏற்கனவே மத்திய அரசிடம் கையளிக்கப்பட்ட இரு கடிதங்கள் புறக்கணிக்கப்பட்டிருந்ததோடு, மீண்டும் ஜனாதிபதியின் கவனத்திற்கு தமிழக அரசால் அனுப்பி வைக்கப்பட்டிருந்த மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தனது மகனை கருணை கொலை செய்துவிடுமாறு, அற்புதம்மாள் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)