Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

13ஐ மாற்றாமல் 20ஐ ஏற்கக் கூடாதென வலியுறுத்து!

In இலங்கை
Updated: 07:14 GMT, Jun 15, 2018 | Published: 07:14 GMT, Jun 15, 2018 |
0 Comments
1086
This post was written by : Varshini

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தை திருத்தியமைக்காமல் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்கக் கூடாதென, Buddha Sasana Karaya Sadhaka Mandalaya எனப்படும் பௌத்த அமைப்பொன்று வலியுறுத்தியுள்ளது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாதொழிக்கும் வகையில் மக்கள் விடுதலை முன்னணியினால் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ள 20ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில், குறித்த அமைப்பு அறழி;கையொன்றை வெளியிட்டு மேற்படி விடயத்தைக் கூறியுள்ளது.

20ஆவது திருத்தச் சட்டமானது, ஒற்றையாட்சியை இல்லாமல் செய்து சமஷ்டியை ஏற்படுத்த வழிவகுக்குமென குறிப்பிட்டுள்ள குறித்த அமைப்பு, அதனை கடுமையாக எதிர்ப்பதாக கூறியுள்ளது. இந்நிலையில், 13ஆவது திருத்தச் சட்டத்தை மாற்றியமைக்காமல் 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு அரசியல் கட்சிகள் ஆதரவு வழங்கக் கூடாதென வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை அரசாங்கத்தின் செயற்பாடுகளின் மேற்கத்தேய சக்திகள் தலையீடு செய்யவேண்டுமென்றும், நாட்டை பிரித்து சமஷ்டியை ஏற்படுத்தவும் சில சக்திகள் முயன்று வருகின்றன என்ற குற்றச்சாட்டையும் குறித்த பௌத்த அமைப்பு முன்வைத்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)