Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘காலா’ உலகளவில் சிறப்பு கண்டுள்ளது: ரஜினிகாந்த்

In இந்தியா
Updated: 07:28 GMT, Jun 15, 2018 | Published: 07:28 GMT, Jun 15, 2018 |
0 Comments
1418
This post was written by : Kemasiya

காலா திரைப்படத்திற்கு உலகம் முழுவதும் சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளதாக, நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கம் குர்செயோங்கில், இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் மேற்படி கூறியுள்ளார்.

அத்துடன் கர்நாடகாவிலும் தனது படத்திற்கு சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளதாக கூறிய அவர், உலகளவிலும் காலா முதலிடம் பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பிற்காக மேற்கு வங்கம் சென்றுள்ள ரஜினிகாந்தை, அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் கௌதம் தேவ் சந்தித்து பேசியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

காலா திரைப்படத்திற்கு கர்நாடகாவில் தடை விதிக்கப்பட்டிருந்ததோடு, இந்தியாவில் பல தரப்பு கட்சிகள் மற்றும் அமைப்புக்களும் காலா மீதான எதிர் கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.

இந்நிலையில் காலா திரைப்படம் கர்நாடகாவில் வெளியாக நீதிமன்றம் அனுமதியளித்ததை தொடர்ந்து தடைகளையும் மீறி அம்மாநிலத்தில் படம் வெற்றிக்கொடி நாட்டியது.

இதேவேளை உலகளவிலும் காலா சிறப்பாக திரையிடப்பட்டிருந்த நிலையில், காலா உலகளவில் வெற்றி கண்டுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)