Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தியாவை ஆக்கிரமித்துள்ள கால்பந்து காய்ச்சல்

In உதைப்பந்தாட்டம்
Updated: 07:36 GMT, Jun 15, 2018 | Published: 07:36 GMT, Jun 15, 2018 |
0 Comments
1038
This post was written by : Varshini

2018 உலகக்கிண்ண கால்பந்து திருவிழா ஆரம்பித்துள்ள நிலையில், இந்தியாவிலும் அதற்கான ஆதரவு அதிகரித்து வருகின்றது.

வடகிழக்கு மாநிலங்களான கொல்கத்தா, கேரளா ஆகிய பகுதிகளிலுள்ள காற்பந்து இரசிகர்கள் கால்பந்து மீதான தங்கள் காதலை வித்தியாசமாக வெளிப்படுத்தியுள்ளனர்.

கொல்கத்தாவில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் மெஸ்ஸியின் தீவிர ரசிகர். ரஷ்யா செல்ல வசதியில்லாததால், அர்ஜென்டினா அணி ஜேர்சியின் வர்ணத்தை வீடு முழுவதும் பூசி போட்டியை வரவேற்றுள்ளார்.

கொல்கத்தாவில் டீக்கடை நடத்திவரும் ஷிப் ஷங்கர் பத்ரா என்பவர், ஆர்ஜன்டீனாவின் மிகப்பெரிய ரசிகர் என்பதுடன், சற்று வித்தியாசமான உணர்வுகளையும் வெளிப்படுத்தக்கூடியவர்.

ரஷ்யா சென்று போட்டிகளைக் காணும் இவரது ஆசை நிறைவேறாத காரணத்தினால், தனது மூன்று மாடி வீட்டிற்கு அர்ஜென்டீனா வீரர்கள் அணியும் ஜெர்சியின் கலரை வர்ணமாக பூசி, தன்னுடைய வீட்டை அர்ஜென்டினா அணியாக மாற்றியுள்ளார்.

அதேபோல், கேரளா மாநிலம் கொச்சியில் வசிக்கும் தம்பதியினர் தங்களது வீட்டை பிரேசில் தேசியக்கொடி வண்ணத்திற்கு மாற்றியுள்ளனர்.

பிரேசிலின் வீடு என்று எழுதப்பட்டு வீட்டு சுவர்களில் அந்நாட்டு தேசிய கொடி வண்ணம் பூசப்பட்டுள்ளது. மேலும், சுற்றுச்சுவற்றில் பிரேசில் அணி வீரர்களின் புகைப்படங்கள் தொங்க விடப்பட்டுள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)