Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மரித்து போனதா மனித நேயம்? – சேலத்தில் நடந்த பரிதாப செயல்!

In இந்தியா
Updated: 11:51 GMT, Jun 15, 2018 | Published: 07:42 GMT, Jun 15, 2018 |
0 Comments
1307
This post was written by : Kemasiya

சேலம் மாவட்டம் ஓமலூரில் தேனீர் கடையொன்றிற்குள் சென்று தேனீர் கேட்ட, மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் பரிதாபமாக அடித்து காயப்படுத்தப்பட்டுள்ளார்.

காயமடைந்த நிலையில் ரத்தம் சிந்த வீதிக்கு வந்த குறித்த இளைஞரை, அருகில் உள்ள ஏனைய கடை தொழிலாளர்களும் தடிகளால் அடித்து துன்புறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் நடக்கவே முடியாத நிலையில், ரத்தம் சிந்த வீதியில் நடந்த இளைஞர், வீதியருகே உள்ள மரத்தின் கீழ் வீழ்ந்து படுத்துள்ளார்.

இதை கண்ட சில மனித நேயம் கொண்டவர்கள் தண்ணீர் தெளித்தும், குடிக்க தண்ணீர் கொடுத்தும் தேற்றியுள்ளனர்.

இதையடுத்து அருகிலுள்ளவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், ஓமலூர் வைத்தியசாலை அன்புலன்ஸ், அவரை மீட்பு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் ஓமலூர் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)