Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இரவிரவாகத் தீயணைப்பு பணிகள்: மார்க் கல்லாச்சர்

In
Updated: 03:34 GMT, Jun 17, 2018 | Published: 03:34 GMT, Jun 17, 2018 |
0 Comments
1097
This post was written by : Johnson paiva

லண்டன், கிளாஸ்கோவின் கல்லூரி ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்திற்கான மீட்புப்பணிகள் இரவிரவாக இடம்பெற்றதாக தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவின் முகாமையாளர் மார்க் கல்லாச்சர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், “நேற்றைய தினம் 120 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 20 தீயணைப்பு இயந்திரங்கள் மூலம் தீயினை அணைத்து எமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருந்தாலும் 50  மீட்புகுழு பணியாளர்கள், மற்றும் 9 தீயணைப்பு இயந்திரங்கள் கொண்டு நேற்று மாலை மற்றும் நேற்றிரவு தொடர்ந்தும் எமது மீட்புப்பணிகளைத் தொடர்ந்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், “விபத்து இடம்பெற்ற கட்டடம் மட்டுமல்லாமல் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் சேதமடைந்த இடங்கள் அனைத்தையும் கண்காணித்து முழுமையான பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளைத் தொடர்கிறோம்” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னரும் குறித்த கட்டடத்தின் ஒரு பகுதி தீயினால் சேதமடைந்திருந்த நிலையில் நேற்று மீண்டும் தீ ஏற்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg