Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிளாஸ்கோ தீவிபத்து பாரிய சேதத்தினை ஏற்படுத்திவிட்டது: நிக்கோலா ஸ்டேர்ஜன்

In
Updated: 04:06 GMT, Jun 17, 2018 | Published: 04:06 GMT, Jun 17, 2018 |
0 Comments
1093
This post was written by : Johnson paiva

ஸ்கொட்லாந்து முதலமைச்சர் நிக்கோலா ஸ்டேர்ஜன் நேற்று (சனிக்கிழமை) தீவிபத்து இடம்பெற்ற கிளாஸ்கோவின் கலைக்கல்லூரிக்கு சென்று பார்வையிட்டார்.

வரலாற்றில் இது பெரியளவிலான தீவிபத்து எனவும் கலைஞர்களின் படைப்புக்கள் சேதமடைந்தமை மனவருத்தம் அளிக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.

தீவிபத்து தொடர்பாக முதலமைச்சர் மேலும் தெரிவிக்கையில், “குறித்த தீவிபத்து பாரிய சேதத்தினை ஏற்படுத்தியுள்ளது, 1909 இல் வாழ்ந்த ஸ்கொட்லாந்து கலைஞர் சார்லெசின் பல படைப்புகள் சேதமடைந்துள்ளன, மேலும் இந்த விபத்து பலரது மனத்தினையும் சேர்த்து காயப்படுத்தியுள்ளது”. எனக் கூறியுள்ளார்.

மேலும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னரும் குறித்த கட்டடத்தின் ஒரு பகுதி தீயினால் சேதமடைந்திருந்த நிலையில் நேற்று ஏற்பட்டுள்ள தீவிபத்து அதைவிட மிகப்பெரிய விபத்து எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் தீயணைப்பு மற்றும் மீட்புகுழு பணியாளர்கள் மற்றும் தீயணைப்பு இயந்திரங்கள் தொடர்ந்து மீட்புப்பணிகளைத் தொடர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg