Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பெண்ணை உயிருடன் விழுங்கிய மலைப்பாம்பு! – இந்தோனேசியாவில் பரபரப்பு 

In
Updated: 06:44 GMT, Jun 17, 2018 | Published: 05:00 GMT, Jun 17, 2018 |
0 Comments
2056
This post was written by : Johnson paiva

இந்தோனேசியாவில் 23 அடி நீள இராட்சத மலைப்பாம்பொன்று பெண்ணொருவரை உயிருடன் விழுங்கியுள்ளது.

இந்தோனேஷியாவின் முன்னா எனும் தீவில் உள்ள லாவெலா கிராமத்தில் வசிக்கும் 51 வயதுடைய திபா என்ற பெண்ணையே இந்த மலைப்பாம்பு நேற்று (சனிக்கிழமை) விழுங்கியுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமது தோட்டத்தில் காய்கறிகள் பறிப்பதற்காகச் சென்ற அவர் இரவு முழுவதும் வீட்டுக்கு வராதமையால் அவரது உறவினர்கள் தொடர்ச்சியாக தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இறுதியாக தோட்டத்துக்குச் சென்று பார்வையிட்டபோது அங்கு ஒரு இராட்சத மலைப்பாம்பொன்று ஏதோ இரையை விழுங்கிவிட்டு நகர முடியாமல் படுத்திருப்பதை அவதானித்துள்ளனர்.

மேலும் சந்தேகம் கொண்ட கிராமத்தினர் அந்த இராட்சத மலைப்பாம்பைக் கொன்று அதன் வயிற்றுப்பகுதியைக் கத்தியால் கிழித்துப்பார்த்தபோது திபாவின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கிராமத்தினர் கூறுகையில், “இதற்கு முன்னர் சிறிய அளவிலான மலைப்பாம்புகள் தான் இங்கு சுற்றித்திரியும்.  இவ்வாறான இராட்சத மலைப்பாம்பை கண்டதில்லை. தோட்டங்களில் பாறைகளும் குழிகளும் அதிகமாகக் காணப்படுகின்றமையால் இங்கு அதிகமாக மலைப்பாம்புகள் வசித்து வருகின்றன” என குறிப்பிட்டுள்ளனர்.

வழக்கமாக ஆடுகள், கோழிகள், சிறு உயிரினங்களைத்தான் மலைப்பாம்புகள் அடித்துக் கொல்லும். எனினும் மனிதர்களை உயிருடன் விழுங்கும் எனக் கதைகளிலும் திரைப்படங்களிலும் மட்டுமே நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் இந்தச் சம்பவத்தின் ஊடாக தற்போது உண்மையாகவே மலைப்பாம்புகள் மனிதர்களையும் வேட்டையாடும் என்பதை நாம் உணர்ந்து விட்டோம் எனவும் அந்த மக்கள் அச்சம் வெளியிட்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg