Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழ் மக்களை மீண்டும் துன்பத்திற்குள் தள்ள முயற்சி: டிலான் குற்றச்சாட்டு

In இலங்கை
Updated: 13:10 GMT, Jun 17, 2018 | Published: 13:10 GMT, Jun 17, 2018 |
0 Comments
1276
This post was written by : Jeyachandran Vithushan

வன்னி மாவட்டத்தில் இந்த அரசாங்கத்தால் எந்தவொரு அபிவிருத்தி செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படவில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா குற்றம் சாட்டியுள்ளார்.

வவுனியா வெளிக்குளம் பிரதேசத்தில் ஜனநாயக மக்கள் காங்கிரஸின் வன்னி மாவட்ட தலைமை காரியாலய திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

வவுனியாவில் எந்தவகையான அபிவிருத்தி பணிகளும் முன்னெடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டிய அவர், இங்கிருந்து நாடாளுமன்றம் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களின் அபிவிருத்தி முன்னெடுப்புகள் குறித்து தேடி பார்க்குமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்வதாக குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் காலத்தில் இங்கு பல அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டன, ஆனால் இன்று அவ்வாறு எதுவும் இடம்பெறுவதில்லை. எனவே கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அது தொடர்பில் கவனம் செலுத்துவதில்லை என அவர் குற்றம் சாட்டினார்.

அதுமட்டுமன்றி குறைந்தது தமிழ் மக்களின் தேசிய பிரச்சினையான அரசியல்கூட அவர்களால் பெற்று கொடுக்க முடியவில்லை. அதற்காக அவர்கள் ஏன் முயற்சி எடுக்கவில்லை.

எனது அரசியல் துரோகியாக நான் கருதும் சந்திரிக்கா அம்மையார் சுதந்திரக் கட்சியை, ஐக்கிய தேசியக் கட்சியிடம் அடகு வைத்துள்ளார்.

அதேபோல் சுமந்திரன் ஊடாக கூட்டமைப்பையும் ஐக்கிய தேசியக் கட்சியிடம் அடகு வைத்துள்ளார் என வர கூறினார்.

மேலும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை தக்கவைத்து கொள்வதே சிறுபான்மை மக்களுக்கு உள்ள ஒரே ஆயுதம். ஆனால் சுமந்திரன் நிறைவேற்றதிகார முறைமை வேண்டாம் என கூறுகின்றார்.

ஆகவே கூட்டமைப்பு தமிழ் மக்களை மீண்டும் துன்பதிற்குள் தள்ளவே முயற்சிக்கின்றது. எனவே கூட்டமைப்பிற்குள் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளும் சுமந்திரனின் நோக்கத்தில் இருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

எனவே ரெலோ, புளொட் போன்ற கட்சிகள் கூட்டமைப்பில் இருந்து வெளியேற வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg