Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மோடி வீடு நோக்கி ஆம் ஆத்மி பேரணி! மூடப்பட்ட மெட்ரோ நிலையங்கள்

In இந்தியா
Updated: 13:24 GMT, Jun 17, 2018 | Published: 13:15 GMT, Jun 17, 2018 |
0 Comments
1060
This post was written by : Jeyachandran Vithushan

பிரதமர் நரேந்திர மோடி வீடு நோக்கி டெல்லியில் நூற்றுக்கணக்கான ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் பேரணியாக சென்றதால் 5 டெல்லி மெட்ரோ ரெயில் நிலையங்களில் சேவையை ரத்து செய்யப்பட்டுள்ளது.

டெல்லி மெட்ரோ ரெயில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 12 மணியளவில் லோக் கல்யாண் மார்க் ரெயில் நிலையத்தில் பயணிகள் உள்ளே நுழையும் மற்றும் வெளியே வரும் வாயில்களை மூடியது.

மத்திய தலைமை செயலகம், உத்யோக் பவன், படேல் சவுக்க் மற்றும் ஜன்பத ஆகிய ரெயில் நிலையங்கள் 2 மணி நேரங்கள் மூடப்பட்டது. ஆம் ஆத்மி கட்சி பேரணியாக செல்லவிருப்பதால் 5 ரெயில் நிலையங்களும் மூடியே காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் கவர்னர் மாளிகையில் போராட்டம் நடத்திவரும் அம்மாநில முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக அக்கட்சியின் தொண்டர்கள் பேரணியை மேற்கொள்ளவுள்ளார்கள்.

மேலும், இந்த பேரணிக்கு பொலிஸாரின் அனுமதி பெறப்படாத நிலையில், அசம்பாவிதங்களை தடுக்கும் நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg