Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உயிருடன் புதைக்கப்பட்டு 3 நாளில் வெளிவந்த கலைஞர்: பொதுமக்கள் ஆச்சரியம் 

In உலகம்
Updated: 10:46 GMT, Jun 18, 2018 | Published: 10:46 GMT, Jun 18, 2018 |
0 Comments
1315
This post was written by : Johnson paiva

அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த செயற்திறன் கலைஞர் ஒருவர் பரபரப்பான வீதியில் உயிரோடு புதைக்கப்பட்டு 3 நாட்களின் பின்னர் உயிரோடு மீண்டும் வெளியே வந்துள்ளார்.

73 வயதான மைக் பார் என்ற செயற்திறன் கலைஞரே குறித்த சாதனையினை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நிகழ்த்தியுள்ளார். குறித்த நிகழ்வு டாஸ்மானியாவில் இடம்பெறவுள்ள பிரபலமான “இருண்ட கலை நிகழ்வு” (Dark mofo festival) என்ற விழாவின் ஒரு பகுதியாகவே நடத்தப்பட்டுள்ளது.

கடந்த விளயாழக்கிழமையிலிருந்து 72 மணித்தியாலங்கள் நிலத்தினுள் வாழ்ந்த இவருக்கு ஓட்ஸிசன் மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டதோடு பொழுது போக்கிற்காக வாசிப்பு மற்றும் எழுதுபொருட்கள் வழங்கப்பட்டன.

இது தொடர்பாக அங்கிருந்தவர்களில் ஒருவர் கூறுகையில் மூன்று நாட்களாக அவர் உணவின்றி அங்கு இருந்துள்ள நிலையில் அவருடைய வயது இந்த சாதனைக்கு ஒத்துழைத்துள்ளமை ஆச்சரியப்படவைத்ததாகவும் இதற்கு அதிகளவில் தைரியம் தேவை எனவும் கூறியுள்ளார்.

குறித்த கலைஞர் நிலத்தினுள் இருந்து வெளியே வருவதை பார்த்த பொதுமக்கள் மிகுந்த ஆச்சரியத்துடன் காணப்பட்டனர்.

இந்நிலையில் செயற்திறன் கலைஞரான மைக் பார் சாதாரண மனிதனுடைய உடல்தகுதிக்கு மீறிய சாதனைகளை நிகழ்த்துவதில் பிரசித்தி பெற்றவராகக் கருதப்படுகின்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg