Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

2020ஆம் ஆண்டளவில் ரயில் சேவையில் பாரிய மாற்றம்!

In இலங்கை
Updated: 13:50 GMT, Jun 18, 2018 | Published: 13:50 GMT, Jun 18, 2018 |
0 Comments
1075
This post was written by : Vithushagan

இலங்கையில் நாளாந்தம் சுமார் 4 இலட்சத்துக்கு மேற்பட்ட ரயில் பயணிகள் பயணங்களில் ஈடுபடுவதாக ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் எஸ்.எம்.அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.

இதற்கமைவாக ரயிலவே துறையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக குறிப்பிட்ட அவர் 2020ஆம் ஆண்டளவில் ரயில் சேவையில் புதிதாக 232 ரயில் பெட்டிகள் ஒன்றிணைக்கப்படுமென்றும்  தெரிவித்துள்ளார்.

இந்தப் பெட்டிகள் மற்றும் எஞ்சின்கள் இந்தியா, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட உள்ளன. இந்தியாவிலிருந்து எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் எஞ்சின் ஒன்றும் 12 ரயில் பெட்டிகளும் இறக்குமதி செய்யப்பட உள்ளன.

மேலும் 5 ரயில் பெட்டிகள் எதிர்வரும் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் கொண்டுவரப்படும். 2020ஆம் ஆண்டில் மேலும் 160 பெட்டிகள் இறக்குமதி செய்யப்பட உள்ளன.

இவை தொடர்பான உடன்படிக்கை விரைவில் கைச்சாத்திடப்படும் என்றும் ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் எஸ்.எம்.அபேவிக்ரம தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg