Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பெண் கட்டளை அதிகாரியுடன் இலங்கை வந்த முதலாவது போர்க்கப்பல்!

In இலங்கை
Updated: 06:43 GMT, Jun 19, 2018 | Published: 06:15 GMT, Jun 19, 2018 |
0 Comments
1098
This post was written by : Risha

பெண் கட்டளை அதிகாரியுடன் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த பிரான்ஸின் இரு போர்க்கப்பல்கள் இலங்கைக்கான ஒருநாள் பயணத்தை நிறைவுசெய்து திரும்பிச் சென்றுள்ளது.

‘Dixmude’ மற்றும் ‘Surcouf’ ஆகிய இரு போர்க்கப்பல்களே இலங்கைக்கு வந்திருந்த நிலையில், ‘Surcouf’ போர்க்கப்பலின் கட்டளை அதிகாரியாக கொமாண்டர் கிரிஸ்ரின் றிப்பே விளங்குகிறார்.

அந்தவகையில், ஒரு பெண் கட்டளை தளபதியொருவருடன் கொழும்பு துறைமுகத்திற்கு வந்த முதலாவது போர்க்கப்பலாக இது அமைந்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

நேற்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த போர்க்கப்பல்களுக்கு, இலங்கை கடற்படையினரால் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து, இலங்கை வருகைதந்த முதலாவது கட்டளை அதிகாரிக்கு இலங்கை கடற்படையின் பெண் அதிகாரிகளினால் மகத்தான வரவேபளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து குறித்த கப்பல்கள் நேற்று மாலை திரும்பிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg