Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் நாளை கலந்துரையாடப்படும் – சபாநாயகர்

In இலங்கை
Updated: 01:41 GMT, Jun 20, 2018 | Published: 01:41 GMT, Jun 20, 2018 |
0 Comments
1096
This post was written by : sujithra

மாகாணசபைத் தேல்தல் குறித்து நாளை (வியாழக்கிழமை) இடம்பெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருடன் கலந்துரையாடப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

மாகாணசபைகளுக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு ஒரு வருடம் நிறைவடையவுள்ள நிலையில் அதனை மீண்டும் நடத்துவது தொடர்பான விடயங்களை ஜனாதிபதியினாலோ பிரதமராலோ விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரினாலோ இதுவரை அறிவிக்க முடியாதுள்ளதென ஒன்றிணைந்த எதிரணி குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பில், ஒன்றிணைந்த எதிரணியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும  நேற்று நாடாளுமன்றில் கேள்வி எழுப்பியதை அடுத்தே சபாநாயகர் மேற்குறித்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

இதேவேளை சட்டமா அதிபரின் ஆலோசனை மற்றும் இணக்கம் கிடைத்தவுடன் மத்திய வங்கியின் முறிகள் மோசடியுடன் தொடர்புடைய ஏனைய ஆவணங்கள் தொடர்பில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி செயலாளர் தம்மிடம் அறிவித்ததாகவும் சபாநாயகர் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg