Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தபால் ஊழியர்கள் இன்று முதல் தொடர் உண்ணாவிரதம்!

In இலங்கை
Updated: 07:22 GMT, Jun 20, 2018 | Published: 02:01 GMT, Jun 20, 2018 |
0 Comments
1123
This post was written by : sujithra

பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்த தபால் தொழிற்சங்க ஊழியர்கள் இன்று முதல் (புதன்கிழமை) தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

தமது பிரச்சினைகளுக்கான தீர்வினை அதிகாரிகள் இதுவரை வழங்காத காரணத்தினாலேயே தாம் மேற்கொண்ட தொழிற்சங்க நடவடிக்கையை கடுமையாக்கும் நோக்கில் இந்த உண்ணாவிரதத்தில் ஈடுபடவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கத்தின் ஒருங்கமைப்பாளர் சினத்தக்க பண்டார தெரிவித்துள்ளார்.

மேலும் தபால் ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக தபால் திணைக்களத்தின் அனைத்து சேவைகளுக்கும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவர்களின் இந்த நடவடிக்கை காரணமாக தபால் நிலையங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் அனைத்து சேவைகளும் தடைப்பட்டுள்ளது இதனால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg