Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜம்மு -காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி!

In இந்தியா
Updated: 03:10 GMT, Jun 20, 2018 | Published: 03:10 GMT, Jun 20, 2018 |
0 Comments
1082
This post was written by : Yuganthini

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் ஆளுநர் ஆட்சிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த மாநிலத்தை ஆட்சிசெய்த மக்கள் ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்துக்கு அளித்து வந்த ஆதரவை பா.ஜ.க. வாபஸ் பெற்றதைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் மெகபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சியும், பா.ஜ.கவும் கூட்டணி அமைத்துக் கடந்த 3 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தன.

எனினும், கடந்த சில மாதங்களாகக் கூட்டணிக்குள் ஏற்பட்ட முரண்பாடுகளினால் அரசாங்கத்துக்கு அளித்த ஆதரவை பா.ஜ.க தற்போது வாபஸ் பெற்றுள்ளது.

இதைத் தொடர்ந்து பெரும்பான்மை ஆதரவு இல்லாத காரணத்தால், முதல்வர் பதவியை மெகபூபா முப்தி இராஜினாமா செய்து, கடிதத்தை ஆளுநர் என். வோராவிடம் கையளித்துள்ளார்.

மேலும் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சியும், தேசிய மாநாட்டுக்கட்சியும் முன்வராத காரணத்தினால் மாநிலத்தில் எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்காத சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, மாநிலத்தில் ஆளுநர் ஆட்சிக்குப் பரிந்துரை செய்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநர் வோரா கடிதம் எழுதியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆளுநர் ஆட்சி நடைமுறைப்படுத்தும் 6 மாத காலத்துக்குள் புதிய அரசாங்கம் அமைய முயற்சி எடுத்தால் ஆளுநர் ஆட்சி விலக்கிக்கொள்ளப்படும் என்றும் இல்லாவிட்டால், ஆளுநர் ஆட்சி மாநிலத்தில் 6 மாதங்களுக்குப் பின்னரும் நீடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான அரசியல் சூழ்நிலை காரணமாக ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg