Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐவரிகோஸ்ட்டில் கடும் மழை: 18 பேர் உயிரிழப்பு

In உலகம்
Updated: 03:20 GMT, Jun 20, 2018 | Published: 03:20 GMT, Jun 20, 2018 |
0 Comments
1086
This post was written by : Johnson paiva

மேற்கு ஆபிரிக்காவில் உள்ள ஐவரிகோஸ்ட் நாட்டின் அபித்ஜான் நகரில் பெய்து வரும் மழையினால் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் மழை வெள்ளத்தில் சிக்கியவர்களில் இதுவரை 115 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளனர். இவர்கள் அந்நாட்டு அரசாங்கத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அரச இணைய தளங்களில் பதிவிடப்பட்டுள்ளது.

இந்த மழை காரணமாக 50 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் பாதிப்பு அடைந்துடன் மேலும் பலர் தங்களது வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். பல பகுதிகளில் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.

மழை தொடர்ந்தும் நீடிக்கின்ற நிலையில் மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg