Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பெண்கள் துன்புறுத்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது: சென்னை உயர்நீதிமன்றம்

In இந்தியா
Updated: 07:33 GMT, Jun 20, 2018 | Published: 04:47 GMT, Jun 20, 2018 |
0 Comments
1063
This post was written by : Kemasiya

சடங்கு என்னும் பெயரில் பெண்கள் துன்புறுத்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாதென, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளது.

கடந்த 2001ஆம் ஆண்டு தர்மபுரியை சேர்ந்த பெண்ணொருவருக்கு பேய் பிடித்துள்ளதாக கூறி, அவர் நள்ளிரவில் தோப்பூர் அணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு வன்முறைக்கு உட்படுத்துப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை நேற்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்த போதே, நீதிபதி மேற்படி கூறினார்.

மனுவை இறுதி விசாரணைக்கு எடுத்து தீர்ப்பை வழங்கிய நீதிபதி, சடங்கு என்ற பெயரில் பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்களை நீதிமன்றம் பார்த்துக்கொண்டிருக்காது என்று குறிப்பிட்டார்.

அத்துடன் இவ்வாறான செயல்களை நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது என்றும், இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டணகள் விதிக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதி எச்சரித்தார்.

அதே சமயம் சம்பவம் நடைபெற்று 17 ஆண்டுகள் கடந்துள்ளதாலும், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் பெண்களாக இருப்பதாலும், ஏற்கனவே அவர்கள் அனுபவித்த தண்டனைகளே போதுமெனக் கூறிய நீதிபதி, ஒருவருக்கு தலா 15 ஆயிரம் ரூபா அபராதம் விதித்தார்.

குறித்த தொகையை எட்டு வாரங்களில் தர்மபுரி நீதிமன்றில் செலுத்தவும், அதை பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg