Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யாழ். பெண் கொழும்பில் சடலமாகக் கண்டெடுப்பு

In இலங்கை
Updated: 07:10 GMT, Jun 20, 2018 | Published: 07:10 GMT, Jun 20, 2018 |
0 Comments
1081
This post was written by : Risha

கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில், யாழ். பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

யாழிலிருந்து வந்து வீட்டுப் பணிப் பெண்ணாக கொழும்பில் பணியாற்றி வந்த பெண்ணொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பெண்ணின் சடலம் கொட்டாஞ்சேனை பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு கண்டெடுக்கப்பட்ட நிலையில், இன்று மரண பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.

உயிரிழந்தவர் 35 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயொருவர் என ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg