Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மயிலிட்டி கடற்பரப்பில் பற்றி எரிந்த கப்பல்: விசாரணைகள் ஆரம்பம்

In இலங்கை
Updated: 08:47 GMT, Jun 20, 2018 | Published: 08:47 GMT, Jun 20, 2018 |
0 Comments
1070
This post was written by : Risha

யாழ்ப்பாணம், மயிலிட்டி கடற்பரப்பில் கைவிடப்பட்ட நிலையில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பலில் ஏற்பட்ட தீடீர் தீ பரவல் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தீ விபத்திற்கான காரணம் குறித்து காங்கேசன்துறை பொலிஸாரும், இலங்கை கடற்படையினரும் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கப்பலில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதிலும், துறைமுகப் பகுதியில் தீயணைப்பு வாகனம் ஒன்று தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ். மயிலிட்டி துறைமுகத்திற்கு அண்மையில் நங்கூரம் இடப்பட்டிருந்த கப்பலில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை தீ பற்றிக்கொண்டுள்ளது.

அதிகாலை 1 மணியளவிலே இத் தீ சம்பவம் ஏற்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர். இதனையடுத்து கடற்படை தீ அணைக்கும் பிரிவினர் கடும் போராட்டத்திற்கு பின்னர் தீயை கட்டுப்படுத்தினர்.

திருத்த வேலை காரணமாக சுமார் ஒரு வருட காலமாக குறித்த பகுதியில் நங்கூரம் இடப்பட்டிருந்த தனியார் ஒருவருடைய கப்பலே இவ்வாறு தீப்பற்றியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg