Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கையில் பொறுப்புக்கூறலை செயற்படுத்த ஐ.நா. தவறியது: ஒப்புக்கொண்டார் குட்டரஸ்

In இலங்கை
Updated: 09:15 GMT, Jun 20, 2018 | Published: 09:15 GMT, Jun 20, 2018 |
0 Comments
1135
This post was written by : Risha

இலங்கையின் கொடிய யுத்தத்தின் பின்னரான பொறுப்புக்கூறலை ஐக்கிய நாடுகள் சபை உரிய முறையில் கையாளவில்லை என்பதை ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டரஸ் ஏற்றுக் கொண்டுள்ளார்.

நோர்வேயில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் இலங்கை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் நடந்த மனிதப் படுகொலைகளுக்கு பொறுப்புக்கூறுவதிலும், நல்லிணக்க செயற்பாடுகளிலும் ஐ.நா.வின் செயற்பாடுகள் செயலிழந்துள்ளமைக்கான காரணங்கள் குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த ஐ.நா. செயலாளர் நாயகம், ”சொந்த நாடுகளில் இடம்பெறும் செயற்பாடுகளுக்கு அந்தந்த நாடுகளே பொறுப்பு. அந்தவகையில், இலங்கையில் நடைபெற்ற யுத்தத்திற்கு இலங்கையர்களே பொறுப்பு. இதனை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

2009ஆம் ஆண்டு இலங்கையில் யுத்தத்தை நிறுத்துவதற்கு தவறியமை மற்றும் யுத்தத்திற்கு பின்னரான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த தவறியமை ஆகிய விடயங்கள் குறித்து ஐ.நா. மீது கடந்த காலங்களில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில், ஐ.நா.வின் செயற்பாட்டிலுள்ள குறைபாடுகள் அடையாளம் காணப்பட்டு, தற்போது மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஆனால், போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான குற்றங்களுக்கு சரியான பொறுப்புக்கூறலை இதுவரை ஐ.நா.வினால் உறுதிபடுத்த முடியவில்லை” எனத் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg