Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உள்நாட்டிலும் – வெளிநாட்டிலும் வசிக்கும் இலங்கையர்களிடம் முக்கிய கோரிக்கை

In இலங்கை
Updated: 14:42 GMT, Jun 20, 2018 | Published: 14:42 GMT, Jun 20, 2018 |
0 Comments
1135
This post was written by : Jeyachandran Vithushan

காணாமல் போன நபர்கள் சம்பந்தமான தகவல்களை காணாமல் போனவர்கள் தொடர்பான செயலகத்திடம் மாத்திரம் வழங்குமாறு வெளிவிவகார அமைச்சு உள்நாட்டிலும் – வெளிநாட்டிலும் வசிக்கும் இலங்கையர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச அமைப்பு இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள பெயர் பட்டியல் தொடர்பாக கவனம் செலுத்தியுள்ள வெளிவிவகார அமைச்சு இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடையம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

குறித்த அமைப்பு வெளியிட்டுள்ள பட்டியலில் 351 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் அது 2009 ஆம் ஆண்டு மே மாதம் இராணுவத்திடம் சரணடைந்த நிலையில் காணாமல் போனவர்களின் பெயர் பட்டியல்.

எவ்வாறாயினும் நாடாளுமன்றத்தில் சட்டமூலம் ஒன்றின் ஊடாக காணாமல் போனவர்கள் தொடர்பான செயலகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இந்த செயலகத்தின் மூலம் காணாமல் போனவர்கள் தேடுதல், காணாமல் போன சூழல்,அவர்களுக்கு ஏற்பட்ட நிலைமை தெளிவுப்படுத்தல், காணாமல் போவதை தடுக்க பரிந்துரைகளை முன்வைத்தல் ஆகிய பல விடயங்களை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கு அமைய தகவல்களை தலைவர், காணாமல் போனவர்கள் தொடர்பான செயலகம், இலக்கம் 34 நாராஹென்பிட்டி வீதி, நாவல என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறும், இதற்கு மேலதிக [email protected] மின்னஞ்சல் முகவரிக்கும் தகவல்களை அனுப்பி வைக்க முடியும் எனவும் வெளிவிவகார அமைச்சு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg