Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தபால் ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

In இலங்கை
Updated: 13:58 GMT, Jun 21, 2018 | Published: 13:58 GMT, Jun 21, 2018 |
0 Comments
1130
This post was written by : Jeyachandran Vithushan

வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்களை உடனடியாக மீண்டும் பணிக்கு திரும்ப வேண்டும் என அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி மீண்டும் பணியில் ஈடுபடுபவர்களுக்கு மாத்திரமே கடந்த ஜூன் மாத கொடுப்பனவுகள் வழங்கப்படும் எனவும் தபால் மா அதிபர் டீ.எல்.பீ ரோஹண அபேரத்ன கூறியுள்ளார்.

கடந்த நாட்களாக தபால் ஊழியர்களின் பணிப் பகிஸ்கரிப்பினால் நாடு முழுவதும் தபால் சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சம்பந்த பட்ட அதிகாரிகளுடனான கலந்துரையாடல் ஒன்று நேற்று முன்னெடுக்கப்பட்டிருந்த போதும் அது வெற்றியளிக்கவில்லை. இதனால் இன்றும் தொடர்ந்து தமது உண்ணாவிரத போராட்டத்தில் தபால் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அந்தவகையில் தற்போது பணிக்கு திரும்பாமல் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களுக்கு ஜூன் மாதம் 01 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரையான நாட்களுக்கு மாத்திரமே சம்பளம் வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அரச தகவல் திணைக்களம் ஊடக அறிக்கையை வௌியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg