Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பலாலியில் பொதியிடல் நிலையத்தை திறந்து வைத்தார் நோர்வே அமைச்சர்!

In இலங்கை
Updated: 14:31 GMT, Jun 21, 2018 | Published: 14:31 GMT, Jun 21, 2018 |
0 Comments
1142
This post was written by : Jeyachandran Vithushan

மீள்குடியேற்றம் செய்து வைக்கப்பட்ட பலாலி கிழக்கு பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட காய்கறி பழங்கள் பொதியிடல் நிலையத்தினை நோர்வே வெளிவிவகார அமைச்சின் இராஜாங்க அமைச்சர் ஜென்ஸ் ஃபுரேலிச் ஹோல்டே திறந்துவைத்தார்.

யாழ்ப்பாணத்திற்கு இன்று (வியாழக்கிழமை) விஜயம் செய்து பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்ட இராஜங்க அமைச்சர், நேர்வே அரசாங்கத்தின் 1 இலட்சம் அமெரிக்க டொலர் நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட குறித்த கட்டடத்தை திறந்து வைத்துள்ளார்.

இந் நிகழ்வில் சர்வதேச தொழில் தாபனத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பணிப்பாளர் திருமதி சிம்ரின் சிங், மாவட்ட அரசாங்க அதிபர் திரு வேதநாயகம், தெல்லிப்பளை பிரதேச செயலர் சிவசிறி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

ஒருமைப்பாட்டின் ஊடாக தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கம் வாழ்வாதரங்களை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் சர்வதேச தொழில் தாபனத்தின் உதவியில் பலாலி கிழக்கு கூட்டுறவு சங்கத்தின் பிரதான பழங்கள் மற்றும் மரக்கறி பொதியிடல் நிலையம் அமைக்கப்பட்டது.

இக் கூட்டுறவு சங்கத்தினால் 100 குடும்பங்கள் தமது வாழ்வாதரங்களை மீளக்கட்டியெழுப்புவதற்கு உதவியாக இது அமையும் எனபதும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg