Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெள்ள நிவாரணத்தில் அநீதி: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

In இலங்கை
Updated: 15:10 GMT, Jun 22, 2018 | Published: 15:10 GMT, Jun 22, 2018 |
0 Comments
1051
This post was written by : Ravivarman

வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கும் உதவித்தொகையில் அநீதி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து மாத்தறையில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மாத்தறை, ரொடும்ப ஊரவ பிரதேசத்தில் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கும் நிவாரணத்தில் அநீதி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தே அகுரஸ்ஸ பஸ்கொட பிரதான வீதியை இடைமறித்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் பஸ்கொட பிரதேச செயலாளர் பிரிவுட்குட்பட்ட ரொடும்ப கிழக்கு, ரொடும்ப மேற்கு, மற்றும் தெங்கந்தெலிய ஆகிய கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பரதேசவாசிகள் கலந்துக்கொண்டனர்.

இது தொடர்பாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பிரதேசவாசி ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், “கடந்த வருடம் மே மாதம் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாக வீடு மற்றும் காணிகளுக்கு ஏற்பட்ட சேதங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசினால் வழங்கப்பட்ட உதவித்தொகையானது முறையாகப் பகிர்ந்தளிக்கப்படவில்லை.

அத்துடன் குறித்த நிவாரண நடவடிக்கைகள் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போதுமானதாக இல்லை. எனவே இவ்விடயம் தொடர்பில் கிராமசேவகர்கள் பொறுப்புக் கூற வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இதேவேளை இவ்விடயம் தொடர்பாக பஸ்கொட பிரதேச செயலாளர் கௌசல்யா குமாரி ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், “அமைச்சின் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ள சுற்று நிருபத்திற்கு அமைய நிவாரணத் தொகை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

எனினும் கிராமசேவகர் ஒருவர் மீது முறைப்பாடு வந்தபோதும் அது குறித்து விசாரணைகளை நாம் மேற்கொண்டபோது அப்பிரதேசத்தில் அவ்வாறான முறைகேடுகளும் இடம்பெறவில்லை எனத் தெரியவந்துள்ளது” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg