Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மருத்துவ படிப்பு கலந்தாலோசனையின் போது ஆதார் அவசியம்: நீதிமன்றம் உத்தரவு

In இந்தியா
Updated: 15:31 GMT, Jun 22, 2018 | Published: 15:30 GMT, Jun 22, 2018 |
0 Comments
1064
This post was written by : Jeyachandran Vithushan

மாணவர்களை மருத்துவ படிப்பு இணைக்கும் போது மேற்கொள்ளப்படும் கலந்தாலோசனையின் போது அவர்கள் பங்கேற்க ஆதார் கட்டாயம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டையைச் சேர்ந்த மாணவி உள்ளிட்ட 7 பேர் கடந்த ஆண்டு தொடர்ந்த வழக்கில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் பிற மாநிலத்தவர்களுக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டதாகவும், அவர்கள் இரட்டை இருப்பிட சான்றிதழ் மூலம் தமிழக ஒதுக்கீடுகளை பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

குறித்த வழக்கு விசாரணையானது இன்று (வெள்ளிக்கிழமை) சென்னை உயர் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாத விசாரணையின் போது தமிழகத்தில் மருத்துவ சேர்க்கை பெற்ற மாணவர்கள் வேறு மாநிலத்திலும் மருத்துவ சேர்க்கைக்காக விண்ணப்பித்துள்ளனரா என அறிக்கை தர நீதிபதி கிருபாகரன் மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் ஆய்வு செய்வது கடினம் என்றும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த ஆண்டு மருத்துவப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் கட்டாயம் ஆதார் அட்டை காண்பிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, இது குறித்த விபரங்களை இணையதளம் மற்றும் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தவும் உத்தரவிட்டிருந்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg