Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிறுத்தை விவகாரத்தில் அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்கும்: லக்ஷ்மன் கிரியெல்ல

In இலங்கை
Updated: 10:17 GMT, Jun 23, 2018 | Published: 09:28 GMT, Jun 23, 2018 |
0 Comments
1064
This post was written by : Jeyachandran Vithushan

கிளிநொச்சியில் சிறுத்தை புலியொன்றை இளைஞர்கள் கொன்றமை தொடர்பில் அரசாங்கம் முறையான விசாரணையை மேற்கொண்டு சட்ட நடவடிக்கை எடுக்குமென சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

புலியை கொன்றவர்கள் தொடர்பில் என்ன நடவடிக்கை எடுக்கபோகின்றீர்கள் என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) கேள்வியெழுப்பியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல மேற்கண்டவாறு கூறினார்.

அத்துடன் சிறுத்தையை அடித்துக் கொலை செய்தமை சம்பந்தமாக சட்டத்தை நடைமுறைப்படுத்தி பொறுப்புக்கூற வேண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என்றும், இளைஞர்களின் அந்த செயற்பாடானது ஒரு வெட்கக்கேடான, மனிதகுலத்திற்கு ஒரு அவமானமான செயல் என புத்த சாசன அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேராவும் கூறியிருந்தார்.

மேலும், சிறுத்தையை கொன்றவர்களுக்கு எதிராக சட்ட ரீதியாக உரிய தண்டனை வழங்குவதாக, இதன் போது வனஜீவராசிகள் பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும கூறியமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg