Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அதிகாரப் போக்கை அரசாங்கம் நிறுத்த வேண்டும் – மாக்சிச லெனினிசக் கட்சி வலியுறுத்து!

In இலங்கை
Updated: 11:08 GMT, Jun 23, 2018 | Published: 11:08 GMT, Jun 23, 2018 |
0 Comments
1165
This post was written by : Litharsan

அரசாங்கம், தபால் ஊழியர் தொழிற்சங்கங்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு நெருக்கடிக்குத் தீர்வு காணவேண்டும். அத்தோடு அதிகாரப் போக்கான அடக்குமுறைச் சிந்தனையையும் அரசாங்கம் நிறுத்த வேண்டும் என புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் சி.க.செந்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு தழுவிய ரீதியில் தமது கோரிக்கைகளுக்காகக் கடந்த 11 ஆம் திகதி முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுவரும் தபால் ஊழியர்களின் கோரிக்கைகளும் போராட்டமும் நியாயமானவையாகும். ஆனால், நல்லாட்சி எனக் கூறும் அரசாங்கம் தபால் ஊழியர்களின் கோரிக்கைகளுக்குச் செவிகொடுக்காது போராட்டத்தை முறியடிக்கவே முற்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தொழிலாளர் போராட்டங்களில் கடைப்பிடித்துவரும் விரோதப் போக்கினை, தொடர்ச்சியாகக் கையாள்வதன்மூலம் உழைக்கும் மக்களின் போராட்டங்களை நசுக்க முற்படுவதைக் கண்டிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், நாட்டின் வடக்கு கிழக்கு உள்ளிட்ட அனைத்து மாகாணங்களையும் சேர்ந்த தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பானது ஒற்றுமையான முறையில் நாடு முழுவதிலும் முன்னெடுக்கப்பட்டுவருகிறது.

ஆனால், அரசாங்கமோ அதற்குச் செவிசாய்க்காது, தபால் ஊழியளர்களுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் சம்பளம் வழங்குவதை நிறுத்தியும், பொலிஸ் மூலம் தபால் விநியோகத்தை முன்னெடுக்கவுள்ளதாக மிரட்டியும் வருகிறது. இவை உழைப்பாளர்களை உதாசீனம் செய்யும் அரசின் மெத்தனப் போக்கையும், அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைச் சிந்தனையையுமே வெளிப்படுத்தி நிற்கின்றன.

எனவே, அரசாங்கம் உடனடியாகத் தபால் ஊழியர் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு அதனை நிறைவேற்ற வேண்டுமென அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg