Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேசிய கைத்தொழிலை மேம்படுத்த பாரிய வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு – பிரதமர்

In இலங்கை
Updated: 04:47 GMT, Jun 24, 2018 | Published: 02:05 GMT, Jun 24, 2018 |
0 Comments
1127
This post was written by : sujithra

தேசிய கைத்தொழில் துறையை மேம்படுத்துவதுடன் அவற்றை பாதுகாப்பதற்கு நல்லாட்சி அரசாங்கம் பாரிய வேலைத் திட்டங்களை முன்னெடுத்திருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தேசிய கைத்தொழிலை அழிப்பதாக சிலர் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளை மறுத்த பிரதமர் தேசிய கைத்தொழிற்துறையை பலப்படுத்தி சர்வதேச சந்தைக்கு தேசிய கைத்தொழில்துறையை முன்னெடுப்பதே நோக்கம் என்றும் கூறியுள்ளார்.

மில்லெனிய, பண்டாரகம பிரதேசத்தில் நேற்று (சனிக்கிழமை) தனியார் பிஸ்கட் தொழிற்சாலையை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் தேசிய கைத்தொழிலாளர்களுக்கு இயந்திரங்கள், உபகரணங்கள் இறக்குமதி செய்யும் போதும் அறவிடப்படும் வரியை நீக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

புதிய கைத்தொழில் துறையை சார்ந்தோருக்கு வரி நிவாரணம் பெற்றுக்கொடுக்கப்படும். அவர்களுக்கு தேவையான உபகரணங்களை வெளிநாட்டில் இருந்து இலங்கைக்குள் கொண்டு வரும்போதும் அதற்காக அறவிடப்படும் வரியை நீக்குவதற்கும் தீர்மானித்துள்ளோம் என்றும் பிரதமர் இங்கு சுட்டிக்காட்டினார்.

இதேவேளை தேசிய உற்பத்திகளின் ஒரு பகுதியை ஏற்றுமதி செய்வதற்கும் ஒரு பகுதியை உள்நாட்டு சந்தைக்கு வழங்கவும்  நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவித்ததுடன். தூரநோக்குடன் சிந்தித்து எதிர்காலத்தை கருத்தில் கொண்டே செயற்படுவதாகவும் அதிக இலாபத்தை நோக்காகக் கொண்டு இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களை நிறுத்தவும் தேவையான சட்டங்களை தயாரித்து வருகின்றோம் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg