Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மக்களுக்கான திட்டங்கள் மக்களை சென்றடைய வேண்டும்: மோடி

In இந்தியா
Updated: 03:03 GMT, Jun 24, 2018 | Published: 03:03 GMT, Jun 24, 2018 |
0 Comments
1079
This post was written by : Kemasiya

மக்கள் நலத் திட்டங்கள், மக்களை சென்றடைய வேண்டுமென்பதே மத்திய அரசின் நோக்கம் என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் 4 கோடி செவில் அமைக்கப்பட்ட, மோகன்புரா அணையை நேற்று (சனிக்கிழமை) மக்களுக்கு அர்ப்பணித்த மோடி, அங்கு நடந்த விழாவில் உரையாற்றுகையில் மேற்படி தெரிவித்தார்.

அத்துடன், மேலும் மூன்று நீர்த்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைத்த அவர், குறித்த திட்டத்துடன் தொடர்புடைய ஒவ்வொருவரையும் தான் வாழ்த்துவதாக தெரிவித்தார்.

இதேவேளை, நேற்றைய தினம் பாரதீய ஜனசங்கத்தின் நிறுவுனர் சியாம பிரசாத் முகர்ஜியின் நினைவு தினம் என்பதால், “வைத்தியர் சியாம பிரசாத் முகர்ஜியின் எண்ணங்கள், கல்வி, நிதி, வளர்ச்சி ஆகியவற்றில் சங்கமித்து இருந்தன.

அவர் கல்வி சுகாதாரம் பாதுகாப்பு குறித்து ஓங்கிக் குரல் கொடுத்தார். அவரது பார்வை தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது” என சியாம பிரசாத்தின் புகழ் பாடி அவரை நினைவு கூர்ந்தார்.

மேலும் அங்கு உரையாற்றிய பிரதமர் ,

“மத்திய அரசின் ஆட்சி வெற்றிகரமாக நான்கு ஆண்டுகள் கடந்துள்ளது. சிலர் தவறான கருத்துக்களை பரப்ப ஆரம்பித்துள்ளனர்.

மக்கள் நலத் திட்டங்கள் மக்களை சென்றடைய வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. எமக்கு முன்னர் ஆட்சியில் இருந்த மத்திய அரசும் அவற்றை சரிவர செய்திருக்கலாம். அவர்களை அப்போது தடுக்கவில்லை.

அதே போன்று முன்னைய ஆட்சியினர் மக்கள் மீது நம்பிக்கை வைக்கவில்லை. ஆனால் தற்போதைய மத்திய அரசு மக்கள் மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் அடுத்த நாடாளுமன்ற தேர்தல் நெருங்குகின்ற அதேவேளை, கட்சிகளின் பிரச்சாரங்கள் ஒன்றை ஒன்று தாக்கும் வகையில் அதிகரித்து வருகின்றமையும், தற்போதைய ஆட்சியை இல்லாமலாக்க சில கட்சிகள் கூட்டணி சேர முயல்வதும் சுட்டிக்காட்டத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg