Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீது தாக்குதல்: 45 பயங்கரவாதிகள் உயிரிழப்பு

In உலகம்
Updated: 03:07 GMT, Jun 24, 2018 | Published: 03:07 GMT, Jun 24, 2018 |
0 Comments
1084
This post was written by : sujithra

உலகை அச்சுறுத்தும் ஐ.எஸ். பயங்கரவாதிகளை இலக்குவைத்து நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் 45 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

சிரியாவில் நடைபெற்ற ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆலோசனைக் கூட்டத்தின்போதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டள்ளது.
ஈராக் நாட்டின் பெரும்பகுதியை ஆக்கிரமித்து வைத்திருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஈராக் இராணுவம் முற்றிலுமாக ஒடுக்கியுள்ளனர்.
ஆனால், அங்கிருந்து அயல் நாடான சிரியாவின் எல்லைப்பகுதிக்கு தப்பிச்சென்ற பயங்கரவாதிகள் அவ்வப்போது ஈராக் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

சிரியாவில் பதுங்கி இருக்கும் ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழிக்கும் பணியில் அமெரிக்க விமானப்படையுடன் அயல் நாடான ஈராக்கின் விமானப்படைகளும் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், சிரியாவின் ஹாஜின் நகரில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்திய, மூன்று வீடுகளின்மீது ஈராக் நாட்டு போர் விமானங்கள் ஆவேச தாக்குதல்களை நடத்தியுள்ளன.

இந்த தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் போர்துறை அமைச்சர், ஊடகத்துறை தலைமை பொறுப்பாளர் உட்பட 45 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ஈராக் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், இதில் பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் இன்னும் சிலர் படு காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள் என்றும் ஈராக் செய்தி வெளியிட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg