Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தெனியாய பல்லேகம பாடசாலைக்கு நிதி திரட்ட இசை நிகழ்ச்சி!

In இலங்கை
Updated: 06:25 GMT, Jun 24, 2018 | Published: 06:25 GMT, Jun 24, 2018 |
0 Comments
1043
This post was written by : Anojkiyan

மாத்தறை- தெனியாய பல்லேகம பாடசாலைக்கு நிதி திரட்டும் நோக்கில், அப்பாடசாலையின் பழையமாணவர்களின் சங்கத்தினரால் இசை நிகழ்ச்சியொன்று நடத்தப்பட்டுள்ளது.

இந்த இசைநிகழ்ச்சி, நேற்று (சனிக்கிழமை) இரவு பல்லேகம பாடசாலையின் பொது மைதானத்தில் இடம்பெற்றது.

மாத்தறை- தெனியாய பல்லேகம வித்தியாலயத்தின் 125வது ஆண்டு நிறைவை முன்னிட்டு பழைய மாணவர்கள் சங்கத்தினால் பாடசாலைக்கு முச்சக்கர வண்டி ஒன்று பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இந்த இசைநிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த இசைநிகழ்ச்சியில் அமைச்சர் சாகல ரத்னாயக்க சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார்.

லியாரா இசைகுழுவின் தலைமையில் இடம்பெற்ற இந்த இசைநிகழ்ச்சியை காண, பல பிரதேசங்களில் இருந்தும் மக்கள் திரண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg