Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமைச்சர் மனோவின் கருத்திற்கு டிலான் பெரேரா கண்டனம்!

In இலங்கை
Updated: 14:22 GMT, Jun 24, 2018 | Published: 14:22 GMT, Jun 24, 2018 |
0 Comments
1281
This post was written by : Jeyachandran Vithushan

16 உறுப்பினர்கள் தொடர்பில் மனோ கணேசன் அனுதாபம் வெளியிட்டுள்ளமையை வன்மையாக கண்டிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகிய 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றத்திற்கு வர முடியாமல் போனமை தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்திருந்த கருத்திற்கு பதிலளிக்கும் பொதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

ஐக்கிய தேசிய கட்சியின் முறையற்ற சர்வாதிகார நிர்வாகத்தின் காரணமாகவே இன்று ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி பலவினமடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டிய அவர், ஆகவே ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிர்ப்பு குழுவாக செயற்பட்டு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியினை பலப்படுத்தும் பாலமாகவே 16 உறுப்பினர்களும் செயற்படுவோம் என அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய அரசாங்கத்தில் தற்போது அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் முறையற்ற விதங்களில் 16 உறுப்பினர்கள் மீதும் வீண் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.

16 உறுப்பினர்களும் கடந்த 3 வருட காலமாக ஒன்றிணைந்து அரசாங்கத்தினை முன்னெடுத்து சென்றாவர்கள் எனபதை குற்றம் சாட்டுபவர்கள், மறந்து விடக் கூடாது என அவர் கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg