Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு: CBCID பொலிஸார் விசாரணை!

In இந்தியா
Updated: 15:38 GMT, Jun 24, 2018 | Published: 15:38 GMT, Jun 24, 2018 |
0 Comments
1116
This post was written by : Jeyachandran Vithushan

தமிழகம் – தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டுக்கு அனுமதி வழங்கியதாகக் கூறப்படும் வட்டாட்சியரிடம் சம்பவ இடத்தில் வைத்து CBCID பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் CBCID பொலிஸார், மாவட்ட ஆட்சியர் வளாகம், ஸ்டெர்லைட் ஆலை குடியிருப்பு, தூத்துக்குடி – பாளையங்கோட்டை நான்கு வழிச் சாலை, திரேஸ்புரம் உள்ளிட்ட பகுதிகளில் தடயவியல் நிபுணர்களுடன் இணைந்து சோதனை மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூட்டுக்கு அனுமதி வழங்கியதாகக் கூறப்படும் வட்டாட்சியர் சந்திரனிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.

அதுமட்டுமன்றி அவர் சம்பவம் நடந்த இடமான அண்ணாநகர் பகுதியில் வைத்து CBCID பொலிஸார் அவரிடம் விசாரணை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg