Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

துருக்கி தேர்தல்: முறைகேடுகள் நடந்ததாக எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

In உலகம்
Updated: 16:48 GMT, Jun 24, 2018 | Published: 16:48 GMT, Jun 24, 2018 |
0 Comments
1080
This post was written by : Jeyachandran Vithushan

பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் துருக்கியில் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.

தற்போது துருக்கியில் 550 இடங்களில் தேர்தலை நடத்த நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டுவரப்பட்டு அது நிறைவேற்றப்பட்டது. அதன் பிரகாரம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமாகிய தேர்தலில் தகுதி பெற்ற வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜனாதிபதி தயீப் எர்டகன் இஸ்தான்புல் நகரில் உள்ள வாக்குச்சாவடிக்கு பலத்த பாதுகாப்புடன் குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார்.

இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அதிபர் தயீப் எர்டகன் ஏராளமான முறைகேடுகளை செய்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

மேலும் 6 பேர் போட்டியிடும் தேர்தலில் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பெறுபவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார். இதில் எவருமே 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பெறாவிட்டால், அதிக வாக்குகள் பெற்ற முதல் 2 வேட்பாளர்களிடையே எதிர்வரும் ஜூலை 8 ஆம் திகதி 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் எனபதும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg