Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தபால் சேவை ஊழியர்களின் பிரச்சினைக்கு தீர்வு நாளை!

In இலங்கை
Updated: 02:05 GMT, Jun 25, 2018 | Published: 02:05 GMT, Jun 25, 2018 |
0 Comments
1211
This post was written by : Yuganthini

தபால் சேவை ஊழியர்களின் பிரச்சினைக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) தீர்வு எட்டப்படுமென தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழிநுட்ப அமைச்சர் அப்துல் ஹலீம் தெரிவித்துள்ளார்.

தபால் ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த வேலைநிறுத்தம் காரணமாக வெளிநாட்டு மற்றும் உள்ளூர் கடிதங்கள் தபால் அலுவலகங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை தபால் சேவை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்புக்கு 25 தொழிற்சங்கங்கள் தனது ஆதரவினை வழங்கியுள்ளதாக தபால் தொழிற்சங்க முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் சிந்தக்க பண்டார தெரிவித்துள்ளார்

துறைமுகம், கல்வி, சுகாதாரம், வீடு மற்றும் பொது முகாமைத்துவ சேவைகள் போன்ற தொழிற்சங்கங்களே தனது ஆதரவினை வழங்க முன்வந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தங்களது கோரிக்கைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் வரை வேலைநிறுத்த போராட்டத்தை தொடரவுள்ளதாகவும் சிந்தக்க பண்டார எச்சரிக்கை விடுத்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg