Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நைஜீரியாவில் இனங்களுக்கிடையிலான மோதலில் 86 பேர் உயிரிழப்பு

In
Updated: 03:55 GMT, Jun 25, 2018 | Published: 03:55 GMT, Jun 25, 2018 |
0 Comments
1184
This post was written by : Risha

மத்திய நைஜீரியாவில் விவசாயிகளுக்கும், கால்நடை வளர்ப்பாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் வன்முறையில் 86 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இரு இனத்தவர்கள் இடையே தசாப்தகாலமாக நீடித்துவரும் நிலப் போராட்டமே இந்த கொடிய வன்முறைக்கு காரணமாக அமைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், நைஜீரியாவின் மத்திய பகுதியிலுள்ள றியோம், பரிகின் லாடி மற்றுமு; ஜொஸ் தெற்கு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பெரோம் விவசாயிகள், ஃபுளானி கால்நடை வளர்ப்பாளர்கள் மீது கடந்த வியாழக்கிழமை நடத்திய தாக்குதலில் ஐவர் கொல்லப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்தே அங்கு மோதல் தீவிரமடைந்துள்ளது.

அத்தாக்குதலுக்கு பழிவாங்கும் வகையில் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) முதல் மீண்டும் மோதல் வெடித்த நிலையிலேயே உயிரிழப்பு அதிகரித்துள்ளது.

இவ்வாறாக நீடித்த வன்முறையில் 50 வீடுகள், 15 மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg