Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விடுமுறையை தொடர்ந்து மீண்டும் கூடுகிறது சட்டப்பேரவை

In இந்தியா
Updated: 05:47 GMT, Jun 25, 2018 | Published: 05:47 GMT, Jun 25, 2018 |
0 Comments
1078
This post was written by : Kemasiya

தமிழக சட்டப்பேரவை, சுமார் 10 நாட்களின் பின்னர் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் கூடுகிறதென தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் 29 ஆம் திகதி முதல் சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகின்றது.

கடந்த 14 ஆம் திகதி சுகாதார துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்திற்கு பின்னர், பேரவைக்கு 10 நாட்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டது.

இந்நிலையில், விடுமுறை முடிந்து இன்று மீண்டும் சட்டப்பேரவை கூடுகிறது. இன்று ஊடகம் மற்றும் விளம்பத்துறை மீதான ஒதுக்கீடு குறித்த விவாதம் நடைபெறவுள்ளது.

சென்னை, சேலம் பசுமைவழிச் சாலைக்கு நிலங்களைக் கையகப்படுத்துதல், ஆளுநர் ஆய்வு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து பேரவையில் கேள்வி எழுப்ப, தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ள நிலையில், இன்றைய அமர்வு பலத்த எதிர்ப்பார்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg