Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழர்கள் இலங்கையின் பிரஜைகள் என்பது சந்தேகம்: சண்.குகவரதன்

In இலங்கை
Updated: 11:03 GMT, Jun 25, 2018 | Published: 09:13 GMT, Jun 25, 2018 |
0 Comments
1282
This post was written by : Risha

தமிழர்களை இந்நாட்டின் பிரஜைகளாக இந்த அரசாங்கங்கள் ஏற்றுக் கொள்கின்றனவா என்பதில் தற்போது சந்தேகம் எழுந்துள்ளதாக மேல்மாகாண சபை உறுப்பினர் சண்.குகவரதன் தெரிவித்துள்ளார்.

வடக்கில் யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக அமைச்சர் டி.எம். சுவாமிநாதனால் முன்வைக்கப்படட அமைச்சரவை பத்திரம் தொடர்ந்து மூன்றாவது தடவையாகவும் நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில், இது தொடர்பாக தனது நிலைபாட்டை வெளிப்படுத்தி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் இது குறித்து மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, ”யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் மற்றும் முன்னாள் போரளிகளின் பிள்ளைகள், பெற்றோர் அல்லது போரால் பாதிக்கப்பட்ட இராணுவ வீரர்கள் யாராக இருப்பினும் அனைவரும் இலங்கையர்களே.

3௦ வருடகால யுத்தம் நிறைவடைந்து பத்து வருடங்கள் ஆகின்ற நிலையில் புனர்வாழ்வளிக்கப்பட்ட இலங்கை பிரஜைகளான போராளிகளுக்கும், அவர்களது குடும்பங்களை சார்ந்தவர்களுக்கும் உதவி வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரம் நிராகரிக்கப்பட்டமை மனவேதனை அளிக்கிறது.

தற்போது எதிர்க்கட்சியில் அமர்ந்துக்கொண்டு தெற்கு மக்கள் மத்தியில் இனவாதத்தை பரப்பிவரும் மஹிந்த அளுத்கமகே, விமல் வீரவன்ச போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறான செயற்பாடுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

சிங்கள மக்கள் புரிந்துணர்வும், மனிதாபிமானமும் மிக்கவர்கள். இனவாத அரசியல்வாதிகளே அவர்கள் மத்தியில் தேவைற்ற கசப்பு மனப்பாங்கை ஏற்படுத்தி வருகின்றனர்.

மீதொட்டமுல்ல குப்பைமேட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடு வழங்கப்படாததை பற்றி கூறும் விமல் வீரவம்சவிற்கு, 83ம் ஆண்டு கலவரத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்கள், பேருவளை அளுத்கம மற்றும் கண்டி திகன கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் ஆகியோருக்கு இன்னும் நட்டஈடு வழங்கப்படாமையை அறிந்தில்லையா” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg